Saturday 4th of May 2024 12:18:49 AM GMT

LANGUAGE - TAMIL
ராசி கண்ணா
ராசி கண்ணாவை கவர்ந்த தளபதி விஜய்!

ராசி கண்ணாவை கவர்ந்த தளபதி விஜய்!


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணாவை கவர்ந்துள்ளார் இளைய தளபதி விஜய்.

தமிழ் சினிமா ரசிகர்கள் கடந்து இந்திய சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படும் முன்னணி நடிகையாக வலம்வரும் ராசி கண்ணா தன்னை கவர்ந்த நடிகராக இளைய தளபதி விஜயை தெரிவித்துள்ளார்.

தமிழில், இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ள ராசி கண்ணா அரண்மனை-3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார்.

இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றார் ராசி கண்ணா. கொரோனா முடக்கம் கொடுத்துள்ள ஓய்வில் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களினூடாக தமது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அவ்வாறு ராசி கண்ணாவும் ருவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய பேவரைட் தமிழ் நடிகர் யார் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தளபதி விஜய் சார் என தெரிவித்தார். மேலும் தனக்கு பிடித்த நடிகை சமந்தா என்றும் ராசி கண்ணா கூறியிருந்தார்.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE